மத்திய அரசு அதிரடி – 2000 ரூபாய் நோட்டு வாபஸ் – ஆர்.கே.

நேற்றி இரவு மத்திய அரசு ரிசவர் வங்கி மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துள்ளது. மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.  சென்ற 2016  நவம்பர் 8  இரவு,  மத்திய அரசின் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் அச்சமயம் பெறும் சர்ச்கைக்குள்ளாகியது.

அது சமயம் மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகினர்.  ஆனால் தற்சமயம் 2000  ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே திரும்ப  பெறப்படுவதால் மக்களுக்கு அத்தகைய பாதிப்புகள் வர வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. இதன் மூலம் பதுக்கப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள்  செல்லாது ஆகும் என்ற நிலை ஏற்படும் என்று வெளியில் பேசப்பட்டாலும்,  ரிசவர் வங்கி இந்நோட்டு அறிமுகப்படுத்தியதற்கான தேவை முடிந்துவிட்டது,  ஆகையால் அதை திரும்பப் பெறுகிறோம் என்று கூறியுள்ளது.

இது ஒரு 2024 க்கான தேர்தல் நெருங்கும் சமயமாக இருப்பதால் இது ஒரு அரசியல் நடவடிக்கை என்று அரசியல் கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.  அடிக்கடி நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்வதால் ரூபாய் நோட்டுக்கள் மீதுள்ள நம்பிக்கை மக்களுக்கு பாதிக்கப்படும் என்று நிபுணர்கள்  கருத்து கூறுகின்றனர். எது எப்படியோ பிரதமர் நரேந்திர மோடி அரசின் அதிரடிகள்,   அரசியலில் அவ்வப்போது காணக்கிடைக்கும் அரிசி அவல் பொரி. கொஞ்சம் நாளைக்கு இதை பேசி மக்கள் மென்று தீர்ப்பார்கள்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *