*புத்தரின் வார்த்தையும் வாழ்க்கையும்*
*புத்தரின் வார்த்தையும் வாழ்க்கையும்*
புத்தரின் சிலையை நாம் பார்க்கும் பொழுதெல்லாம் நம்மை அறியாமல் ஒரு மௌனம் உள்ளே வந்து விடுகிறது
இதற்கு காரணம் அவரின் வார்த்தைகள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தானே
நன்றாக சிந்தித்துப் பாருங்கள் புத்தர் ஒரு பொழுதும் உருவ வழிபாட்டை அனுமதித்ததே இல்லை
ஆனால் இந்த உலகத்தில் மிகவும் அதிகமாக உள்ள சிலை புத்தர் சிலை மட்டுமே
புத்தரின் வார்த்தையை மக்கள் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு மிகப்பெரிய உதாரணம்
புத்தரின் வார்த்தை ஆசையே துன்பத்திற்கு காரணம் மிகவும் ஆழமான அதே நேரத்தில் மிகவும் எல்லாராலும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான வார்த்தை இது
அறிவியலும் ஆன்மீகமும் நேர்கோட்டில் ஒத்து போகும் அற்புதமான வார்த்தை
மனிதர்கள் புத்தரைப் பற்றி ஒரு சில முரண்பாட்ட கொள்கைகளும் கருத்துக்களும் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது
உதாரணமாக தன் மனைவியை நிற்கதியாக்கி விட்டு துறவறம் பூண்டவர் இது புத்தரை ஒருபோதும் இல்லத்து பெண்கள் ஒத்துக் கொள்வதே இல்லை அவரின் மௌனத்தையும் அவர் சிலையையும் ரசிக்கும் அளவிற்கு அவரின் வாழ்வை யாரும் ரசிப்பதில்லை
இது எவ்வளவு பெரிய விசித்திரம் தன் வார்த்தைக்காகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த ஒரு மகானை மக்கள் இப்படித்தான் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது ஜீரணிக்க முடியாத உண்மைதான் இருந்துவிட்டு போகட்டும்
இன்னும் ஒரு பக்கம் அவரின் வாழ்க்கையை பாருங்கள் புத்தரைப் பற்றி தெரிந்தவர் எல்லோருக்கும் தெரியும் அவர் அரச குடும்பத்தை பிறந்தார் அவருக்கு சந்நியாச யோகம் உண்டு ஒரு நாள் அவர் துறவரம் பூண்டே தீருவார் என்று ஜோதிட வல்லுனர்கள் சொல்ல, அதனை மிகவும் மறுதலித்த அரசர் தன் மகன் அவ்வாறு சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே அவருக்கான கல்வி அவருக்கான போர் பயிற்சி அரசருக்கு தேவையான அனைத்து வித்தைகளையும் அவரின் அரண்மனையிலிருந்து அவருக்கு கற்றுத் தரப்படுகிறது
ஆனால் ஒரு நாள் அவர் பிணி மூப்பு சாக்காடு என்ற மூன்று நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வந்து தீரும் என அறிந்த கணத்தில் தான் மரணம் இல்லா பெருவாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும் என தனக்குள் எழுந்த வேட்கையின் மூலம் துறவறம் கொண்டு இறுதிவரை தனக்கு கிடைத்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தபடியே ஒரு உலகில் உன்னதமான துறவையாய் வாழ்கிறார்
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே நாம் வாழும் வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்பது உண்மையாகிறது
அதேபோல் ஜோதிட சாஸ்திரம் என்பது எவ்வளவு ஆழமான உண்மை என்பதும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் புத்தரே அரசனாய் வாழ ஆசைப்பட்டு இருந்தாலும் அவர் துறவறம் பூண்டே தீருவார் என்பது தீர்மானிக்கப்பட்ட உண்மை தானே
அப்படி என்றால் நாம் எல்லோரும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வாழ்வை தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அப்படி இருக்க அவரின் போதனைகளும் அதனை அந்த நிலைக்கு போக அமைப்பு உள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பது தானே நிதர்சனமான உண்மை
அதனால் நாம் ஒன்றில் கவனம் செலுத்துவதும் கவனம் அற்று இருப்பதுவும் மன ஓட்டத்திற்கு ஏற்ப நம் வாழ்வில் இலக்கை நோக்கியே சிந்திக்கிறோம் செயல்படுகிறோம் என்பது திண்ணம்
எல்லோரும் ஆசையை அறுத்து துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட புத்தனும் ஒரு வகையில் தன் வார்த்தைக்கு முரண் தானே
இப்படி எல்லாம் சிந்திக்கும் பொழுது நம் கணியன் பூங்குன்றனார் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது
பெரியோரை புகழ்தலும் இலனே சிறியோரை இகழும் இலனே
– கசெல் –